மணிப்பூரின் இரும்பு மங்கை ஐரோம் சர்மிளா தோல்வி


மணிப்பூரின் இரும்பு மங்கை ஐரோம் சர்மிளா தோல்வி
x
தினத்தந்தி 11 March 2017 4:54 AM GMT (Updated: 2017-03-11T10:24:15+05:30)

மணிப்பூரின் இரும்பு மங்கை என்று அழைக்கப்படுபவர் ஐரோம் சர்மிளா ஒரு தொகுதியில் பின்னடைவை சந்திக்கிறார்.

இம்பால்,

மணிப்பூரின் இரும்பு மங்கை என்று அழைக்கப்படுபவர் ஐரோம் சர்மிளா.சமூக ஆர்வலரான இவர் மத்திய அரசின் ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி 2000-ம் ஆண்டு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்.

அசாம் ரைபிள் படையினரால் அப்பாவி மக்கள் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து தனது 27-வது வயதில்  இந்த போராட்டத்தை தொடங்கினார்.16 ஆண்டுகள் பட்டினி கிடந்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டார். எனினும் அவருக்கு கடைசி வரை வெற்றி கிடைக்கவில்லை. எனவே இந்த சட்டத்தை நீக்கும் திட்டத்தில் அரசிய லில் குதித்தார்.

மணிப்பூர் சட்டமன்ற தேர்தலில் ஐரோம் சர்மிளா கட்சி 3 தொகுதிகளில் போட்டியிட்டது. ஐரோம் சர்மிளா பின்தங்குகிறார் ஐரோம் சர்மிளா 2 தொகுதிகளில்  போட்டியிட்டார். முதல்-மந்திரி இபோபி சிங்கை எதிர்த்து தவுபால் தொகுதியில் நின்றார். மேலும் குராய் தொகுதியிலும் போட்டியிட்டார்.இதில் தவுபால் தொகுதியில் ஐரோம் சர்மிளா முதல்-மந்திரி இபோபி சிங்கிடம் பின்தங்கி இருக்கிறார்.

நான் தோல்வியை பற்றி கவலைப்படவில்லை.   மக்கள் எனக்கு ஒரு வாய்ப்பு வழங்குவார்கள் என எண்ணினேன். எல்லோரும் தங்களது படைபலம் மற்றும் பணபலத்தை வெளிப்படையாக காட்டினார்கள். நாங்கள் 2019 ஆம் ஆண்டு தேர்தலில் முயற்சி செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story