உத்தரகாண்ட் சட்டப்பேரவைத்தேர்தலில் ஹரிஷ் ராவத் படுதோல்வி


உத்தரகாண்ட் சட்டப்பேரவைத்தேர்தலில்  ஹரிஷ் ராவத் படுதோல்வி
x
தினத்தந்தி 11 March 2017 10:28 AM GMT (Updated: 2017-03-11T15:58:21+05:30)

உத்தரகாண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முதல் மந்திரி ஹரிஷ் ராவத் தோல்வியடைந்தார்.

டேராடூன்,

உத்தரகாண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று நடந்து வருகிறது. மொத்தம் 70 தொகுதிகள் கொண்ட அம்மாநிலத்தில் 50 தொகுதிகளில் பாஜக முன்னிலை பெற்றுள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சி உட்கட்சிப் பூசலால் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. வெறும் 17 தொகுதிகளில் மட்டுமே அக்கட்சி முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், தற்போது ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் முதல்வர் ஹரிஷ் ராவத், ஹரித்வார் (ஊரகம்) தொகுதியில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்திருக்கிறார். 12,400 வாக்குகள் வித்தாயசத்தில் அவர் மோசமான தோல்வியைச் சந்தித்துள்ளார். அதேபோல் அவர் போட்டியிடும் மற்றொரு தொகுதியான  கிச்சா தொகுதியிலும் பின்னடைவை சந்தித்து வருகிறார்.

ஹரிஷ் ராவத் தோல்வி அடைந்தது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாரதீய ஜனதா, ஹரிஷ் ராவத் தலைமையிலான அரசை ஒட்டுமொத்தமாக மக்கள் புறக்கணித்துள்ளதையே இந்த தோல்வி காட்டுகிறது என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையே, முதல் மந்திரி பொறுப்பில் இருந்து ஹரிஷ் ராவத் ராஜினாமா செய்தார்.

Next Story