பஞ்சாபில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து வெற்றி


பஞ்சாபில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சித்து வெற்றி
x
தினத்தந்தி 11 March 2017 11:09 AM GMT (Updated: 2017-03-11T16:39:17+05:30)

முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து அம்ர்தசர் கிழக்கு தொகுதியில் வெற்றி பெற்று உள்ளார்.

பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து தான் போட்டியிட்ட அம்ர்தசர் கிழக்கு தொகுதியில் சுமார் 40,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். அவர் தன்னை எதிரித்து போட்டியிட்ட பாஜக வேட்பாளரான ராஜேஷ் குமார் ஹனி என்பவரை 42, 809 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கொண்டார். முன்னாள் கிரிக்கெட் வீரரான சித்து சமீபத்தில்தான் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சித்துவுக்கு 60,477 வாக்குகளும், ஹனிக்கு வெறும் 17,688 வாக்குகளுமே கிடைத்துள்ளது. இத்தொகுதியில் போட்டியிட்ட ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் சரப்ஜோத் சிங் வெறும் 14, 715 வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது. அம்ர்தசர் கிழக்கு தொகுதி சித்துவின் மனைவியான நவ்ஜோத் கவுர் சித்துவிடமிருந்தது. இவர் அத்தொகுதியில் பாஜகவின் சார்பில் 2012 ஆம் ஆண்டில் வெற்றி பெற்றிருந்தார் என்பது குறிப்பிட தக்கது. Next Story