தேர்தலும் வாக்கு எண்ணிக்கையும் நியாயமான முறையில் நடத்தப்பட்டது மாயாவதி புகாருக்கு தேர்தல் ஆணையம் விளக்கம்


தேர்தலும் வாக்கு எண்ணிக்கையும் நியாயமான முறையில் நடத்தப்பட்டது மாயாவதி புகாருக்கு தேர்தல் ஆணையம் விளக்கம்
x
தினத்தந்தி 11 March 2017 3:05 PM GMT (Updated: 11 March 2017 4:02 PM GMT)

தேர்தலும் வாக்கு எண்ணிக்கையும் நியாமன முறையில் நடத்தப்பட்டது மாயாவதி புகாருக்கு தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

புதுடெல்லி,

உத்தர பிரதேச மாநில  சட்டப்பேரவை தேர்தலில் பாரதீய ஜனதா மிகப்பெரும் வெற்றியை பெற்றுள்ளது. ஆளும் சமாஜ்வாடி கட்சியும் பிரதான எதிர்க்கட்சிகளின் ஒன்றான  பகுஜன் சமாஜ் கட்சி 16 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. இதனால், பகுஜன் சமாஜ் கட்சி மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர்  மாயாவாதி வாக்குப்பதிவு இயந்திரங்களில் திட்டமிட்டு செய்யப்பட்டே கோளாறே தோல்விக்கு காரணம் என்று தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தார். மாயாவதி புகாருக்கு தேர்தல் ஆணையம் விளக்கத்தில் கூறியிருப்பதாவது:

கடந்த 2000ம் ஆண்டு முதல் தேர்தலில் வாக்கு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.  வாக்கு இயந்திரத்தை பயன்படுத்த தகுந்த பயிற்சிகள் தேர்தல் அலுவலர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.  வாக்குப் பதிவும், வாக்கு எண்ணிக்கையும் நியாயமான முறையில் நடைபெற்றுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story