சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதல் குறித்து ராஜ்நாத் சிங் ஆலோசனை


சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதல் குறித்து ராஜ்நாத் சிங் ஆலோசனை
x
தினத்தந்தி 11 March 2017 3:22 PM GMT (Updated: 11 March 2017 3:21 PM GMT)

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதல் குறித்து உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் சி.ஆர்.பி.எப். அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

ராய்ப்பூர்,

சத்தீஷ்கர் மாநிலத்தில் நக்சலைட் தாக்குதலில்  சிஆர்பிஎஃப் வீரர்கள் 12 பேர் உயிரிழந்தனர். இதில்  தமிழகத்தை சேர்ந்த சங்கர் என்ற வீரரும் உயிரிழந்தார். நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் காயம் அடைந்த வீரர்களை மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங், அம்மாநில முதல்-மந்திரி ரமன்சிங் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினார். 

அதனைதொடர்ந்து  சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதல் குறித்து உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் முதல்-மந்திரி ராமன் சிங், சி.ஆர்.பி.எப். அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Next Story