அமிர்தசரஸ் எம்.பி. தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி


அமிர்தசரஸ் எம்.பி. தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி
x
தினத்தந்தி 11 March 2017 9:15 PM GMT (Updated: 2017-03-12T02:00:23+05:30)

பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலுடன் அமிர்தசரஸ் பாராளுமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.

சண்டிகார்

பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலுடன் அமிர்தசரஸ் பாராளுமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட குர்ஜித் சிங் அவுஜ்லா, பாரதீய ஜனதா வேட்பாளர் ராஜிந்தர் மோகன் சிங் சினாவை விட 1 லட்சத்து 99 ஆயிரத்து 189 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். குர்ஜித் சிங் அவுஜ்லாவுக்கு 5 லட்சத்து 8 ஆயிரத்து 153 வாக்குகளும், ராஜிந்தர் மோகன் சிங் சினாவுக்கு 3 லட்சத்து 8 ஆயிரத்து 964 வாக்குகளும் கிடைத்தன. ஆம் ஆத்மி வேட்பாளர் உப்கார் சிங் சந்து 1 லட்சத்து 49 ஆயிரத்து 984 வாக்குகள் பெற்றார்.

கடந்த 2014–ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அமிர்தசரஸ் பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அமரிந்தர் சிங் போட்டியிட்டு வெற்றி பெற்றார். சட்லஜ் யமுனா இணைப்பு கால்வாய் தண்ணீர் பங்கீடு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு வழங்கிய தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அமரிந்தர் சிங் கடந்த ஆண்டு தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்ததால், அமிர்தசரஸ் தொகுதி காலியாக இருந்தது.


Next Story