பஞ்சாப் தேர்தலில் வெற்றி காங்கிரசுக்கு வாக்களித்தவர்களுக்கு வதேரா நன்றி


பஞ்சாப் தேர்தலில் வெற்றி காங்கிரசுக்கு வாக்களித்தவர்களுக்கு வதேரா நன்றி
x
தினத்தந்தி 12 March 2017 8:45 PM GMT (Updated: 2017-03-13T00:52:20+05:30)

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை வெற்றிப்பெற செய்ததற்கு அந்த மாநில மக்களுக்கு சோனியா காந்தியின் மருமகனும், தொழிலதிபருமான ராபர்ட் வதேரா நன்றி தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியை வெற்றிப்பெற செய்ததற்கும் கோவா மற்றும் மணிப்பூரில் காங்கிரசுக்கு அதிக ஆதரவு அளித்ததற்கும் அந்த 3 மாநிலங்களை சேர்ந்த மக்களுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், தொழிலதிபருமான ராபர்ட் வதேரா நன்றி தெரிவித்து உள்ளார்.

இது குறித்து அவர் தனது பேஸ்புக் பதிவில், ‘‘பஞ்சாப், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களை சேர்ந்த மக்கள் காங்கிரஸ் மீது நம்பிக்கை வைத்ததற்காக அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். உத்தரபிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் வெற்றிக்காக பா.ஜ.க.வுக்கு வாழ்த்துகள்’’ என தெரிவித்து உள்ளார்.

மேலும் அவர், ‘‘ஒவ்வொரு தேர்தலும் நமக்கு வலுவான பாடங்களையும், புதிய உண்மைகளையும், சில கேள்விகளையும் விட்டு செல்கிறது. பாடங்களில் இருந்து கற்போம். உண்மைகளை ஏற்றுக்கொள்வோம். கேள்விகளுக்கு பதிலளிப்போம்’’ என கூறி உள்ளார்.


Next Story