ஹோலி பண்டிகை ஜனாதிபதி வாழ்த்து


ஹோலி பண்டிகை ஜனாதிபதி வாழ்த்து
x
தினத்தந்தி 12 March 2017 9:15 PM GMT (Updated: 2017-03-13T01:05:08+05:30)

ஹோலி பண்டிகையையொட்டி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மக்களுக்கு விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில் கூறியதாவது:–

புதுடெல்லி

ஹோலி பண்டிகையையொட்டி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, மக்களுக்கு விடுத்துள்ள வாழ்த்துச்செய்தியில் கூறியதாவது:–

வண்ணமயமான ஹோலி பண்டிகையை கொண்டாடும் இந்திய மக்களுக்கு என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நன்னாளையொட்டி அனைவரின் வாழ்விலும் வசந்தம் வீசட்டும்.

மக்களின் நம்பிக்கை மற்றும் எண்ணங்கள் அனைத்தும் பூர்த்தியாக வேண்டும் என வாழ்த்துகிறேன். வானவில்லில் உள்ள பல்வேறு நிறங்களை போல பல கலாசாரங்களை இந்தியா கொண்டிருந்தாலும் நம் அனைவரிடத்திலும் ஒற்றுமை என்றென்றும் தவழ வேண்டும்.

ஏழை மற்றும் ஒடுக்கப்பட்டவர்களிடம் சந்தோ‌ஷத்தை பகிர்வதன் மூலம் அவர்களின் வாழ்விலும் மகிழ்ச்சி பரவட்டும். ஒற்றுமையை உணர்த்தும் இந்நாளில் சகோதரத்துவம், நல்லிணக்கம் மேலும் வலுப்பட வேண்டும். நாட்டில் அமைதி, வளம் பெருக இந்த ஆண்டில் புதிய அத்தியாயம் படைப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story