தொழில் அதிபர் மகன் போதையில் ஓட்டிய கார் மோதி 4 பேர் படுகாயம்


தொழில் அதிபர் மகன் போதையில் ஓட்டிய கார் மோதி 4 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 13 March 2017 5:16 AM GMT (Updated: 2017-03-13T10:46:36+05:30)

டெல்லியை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரின் மகன் போதையில் பி.எம்.டபிள்யூ காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தினார் இதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.


புதுடெல்லி

டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரின் மகன் ராஜத் பிரபாகர். இவர் நேற்று  மது அருந்திவிட்டு,தன்னுடைய பி.எம்.டபிள்யூ காரை ஓட்டி வந்துள்ளார்.தெற்கு டெல்லி பகுதி அருகே அதிவேகமாக காரை ஓட்டிய ராஜத் பிரபாகர்,திடீரென நிலை தடுமாறியுள்ளார்.இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் அங்கிருந்த சுவற்றில் மோதியது. ஆனாலும் வேகம் குறையாத கார் சுவற்றை இடித்துக் கொண்டு,எதிர்பக்கம் வந்த முதிய தம்பதிகள் உட்பட நான்கு பேர் மேல் இடித்துச் சென்றது. மேலும் அந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு ஆட்டோ,கார் உட்பட 3 வாகனங்கள் கடும் சேதமடைந்தன.

இறுதியாக எதிர்புறத்தில் இருந்த மற்றொரு சுவற்றில் மோதி அந்த கார் நின்றுள்ளது.இதனைத் தொடர்ந்து ராஜத் பிரபாகரை கைது செய்த காவல்துறையினர்,அந்த காரிலிருந்து பல மது பாட்டில்களை பறிமுதல் செய்துள்ளனர்.

கடந்த வாரம் இரண்டு ஆடம்பர மெர்சிடஸ் பென்ஸ் கார்களினால் வெவ்வேறு இடங்களில் நடந்த விபத்துகளில் ஒரு சிறுவன் பலியானான்.ஒரு முதியவர் படுகாயமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story