பாஜகவின் மகத்தான வெற்றி பொருளாதார சீர்திருத்தங்களை வேகப்படுத்தும் -பொருளாதார நிபுணர் அரவிந்த் சுப்ரமணியம்


பாஜகவின் மகத்தான வெற்றி பொருளாதார சீர்திருத்தங்களை வேகப்படுத்தும் -பொருளாதார நிபுணர் அரவிந்த் சுப்ரமணியம்
x
தினத்தந்தி 14 March 2017 11:51 AM GMT (Updated: 2017-03-14T17:20:39+05:30)

பாஜகவின் மகத்தான வெற்றி பொருளாதார சீர்திருத்தங்களை வேகப்படுத்தும் என தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியம் தெரிவித்து உள்ளார்.

கொச்சி

ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் பாஜக அரசிற்கு பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்லும் வாய்ப்பை வழங்கியுள்ளதாக அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியம் தெரிவித்தார். இந்த அரசியல் தீர்ப்பு அத்தகைய நடவடிக்கைகளை எடுக்க மோடி அரசிற்கு அளித்துள்ளதாக அவர் கூறினார். ”இங்கிலாந்தின் பிரெக்ஸிட், அமெரிக்க அதிபர் தேர்தல் போல் இத் தேர்தல் முடிவுகளின் வீச்சை கணிக்க முடியவில்லை” என்றார் அவர். 

அரவிந்த் பெட்ரல் வங்கியின் சார்பாக நடத்தப்பட்ட நிறுவுனர் நாள் உரையினை நிகழ்த்தினார், அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் ”அரசு என்ன செய்ய வேண்டுமென்று நினைக்கிறதோ அதைச் செய்ய இப்போது வாய்ப்பு கிட்டியுள்ளது. அடுத்து நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய கொள்கைகள் முதலீடுகளை கொண்டு வருதல், வேலைவாய்ப்பு பெருக்கம், பொருளாதார வளர்ச்சி ஆகியவையே. பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் நோக்கம் வெற்றி பெற்றதா என்பதை அறிய பல்வேறு கட்டங்களை அடைய வேண்டியுள்ளது என்றார். பொருளாதார வளர்ச்சி குறித்த புள்ளிவிவரங்கள் சரியாக இருக்கலாம், இல்லாமலும் போகலாம் என்றும் கூறினார். நிதிப் பற்றாக்குறையை மத்திய அரசு வெற்றிகரமாக குறைத்து விட்டது. இதை மாநில அரசுகளும் பின்பற்றலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மாநில அரசுகள் கடன் வாங்குவதில் சந்தை அடிப்படையிலான அணுகுமுறையை பின்பற்றுவதை தான் ஆதரிப்பதாக அவர் கூறினார். பொறுப்பற்ற மாநில அரசுகள் தங்களின் கடனுக்கு அதிகம் செலவழிக்க வேண்டும் என்றார். உற்பத்தியை அதிகரிக்க சிறந்த தொழில்நுட்பங்களை கண்டறிவது மட்டுமின்றி அவற்றை பயன்படுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.

Next Story