தேசிய செய்திகள்

எனக்கு வாக்களித்தால் தரமான மாட்டிறைச்சி கொடுப்பேன் பா.ஜனதா வேட்பாளர் வாக்குறுதி + "||" + Give me your vote I will give you good quality beef promises BJP s Kerala candidate

எனக்கு வாக்களித்தால் தரமான மாட்டிறைச்சி கொடுப்பேன் பா.ஜனதா வேட்பாளர் வாக்குறுதி

எனக்கு வாக்களித்தால் தரமான மாட்டிறைச்சி கொடுப்பேன் பா.ஜனதா வேட்பாளர் வாக்குறுதி
எனக்கு வாக்களித்தால் தரமான மாட்டிறைச்சி கொடுப்பேன் என பா.ஜனதா வேட்பாளர் வாக்குறுதி அளித்து உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
மலப்புரம், 

கேரள மாநிலம் மலப்புரம் சட்டசபைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் என் ஸ்ரீபிரகாஷ் வேட்பாளராக களம் இறக்கப்பட்டு உள்ளார். பாரதீய ஜனதா வேட்பாளர் ஸ்ரீபிரகாஷ் தொகுதி மக்களுக்கு அளித்து உள்ள வாக்குறுதியில் மாட்டிறைச்சியும் இடம்பெற்று உள்ளது. பிற மாநிலங்களில் பா.ஜனதா மாட்டிறைச்சிக்கு எதிரான கொள்கையை கொண்டு உள்ளநிலையில் தரமான மாட்டிறைச்சியை வழங்குவேன் என அவர் கூறிஉள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலத்தில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்படவில்லை. உத்தரபிரதேச மாநிலத்தில் பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததுமே சட்டவிரோதமாக செயல்பட்ட மாட்டிறைச்சி கூடங்கள் மீது நடவடிக்கை தொடங்கியது. பிற பா.ஜனதா ஆளும் மாநிலங்களிலும் நடவடிக்கை இதனை அடுத்து அதிகரித்து உள்ளது. குஜராத் மாநிலத்தில் பசுவை கொன்றால் ஆயுள் தண்டனை வழங்கும் சட்டம் கொண்டுவரப்பட்டு உள்ளது. இந்நிலையில்தான் ஸ்ரீபிரகாஷ் தொகுதி மக்களுக்கு தரமான மாட்டிறைச்சியை வழங்குவேன் என கூறிஉள்ளார். 

அவருடைய நடவடிக்கையானது மாட்டிறைச்சி விவகாரத்தில் கட்சியின் கொள்கைக்கு எதிராக அமைந்து உள்ளது.