உத்தரகாண்ட் பள்ளியில் ‘வந்தே மாதரம்’ பாடல் கட்டாயம் பா.ஜனதா அரசு உத்தரவு


உத்தரகாண்ட் பள்ளியில் ‘வந்தே மாதரம்’ பாடல் கட்டாயம் பா.ஜனதா அரசு உத்தரவு
x
தினத்தந்தி 7 April 2017 5:11 AM GMT (Updated: 7 April 2017 5:11 AM GMT)

உத்தரகாண்ட் பள்ளிகளில் ‘வந்தே மாதரம்’ பாடல் கட்டாயம் என்று மந்திரி உத்தரவிட்டுள்ளார்.

டேராடூன், 

உத்தரகாண்ட் மாநிலத்தில் பா.ஜனதா அரசு பொறுப்பேற்றும் பல அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் தேசிய கீதம் மற்றும் வந்தே மாதரம் பாடல் தொடர்பாக மாநில அரசு புதிய உத்தரவுகள் பிறப்பித்து உள்ளது. மாநில கல்வி மந்திரி தன்சிங் ரவத் பல்கலைக் கழகங்களில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் என்று ஏற்கனவே உத்தரவிட்டு இருந்தார். அத்துடன் அனைத்து கல்லூரிகளிலும் தேசிய கீதம் மற்றும் நாட்டுப் பற்று பாடல் கட்டாயம் என்று உத்தரவிட்டார். காலை 10 மணிக்கும், மாலை 4 மணிக்கும் தேசிய கீதம் பாட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது. மேலும் உத்தரகாண்டில் வந்தே மாதரம் பாடினால் தான் வசிக்க முடியும் என்று அவர் கூறினார்.

இது தொடர்பாக ரூர்க்கீயில் நடந்த கல்லூரி விழாவில் மந்திரி தன்சிங் ரவத் பேசுகையில், உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கல்லூரிகளில் காலை 10 மணிக்கும் மாலை 4 மணிக்கும் தேசியகீதம் பாட வேண்டும். அதேபோல் பள்ளிகளில் வந்தே மாதரம் பாட வேண்டும். வந்தே மாதரம் பாடினால்தான் உத்தரகாண்ட்டில் வசிக்க முடியும். பட்டதாரி மாணவர்களுக்கான ஆடை கட்டுப்பாடு விவரம் விரைவில் அறிவிக்கப்படும். அரசு மற்றும் அரசு நிதிபெறும் பள்ளி கல்லூரிகளில் இதை செயல்படுத்த வேண்டும். வரும் கல்வி ஆண்டுமுதல் இது அமலுக்கு வரும் என்று கூறினார். 

Next Story