டெல்லி விமான நிலையத்தில் விமானங்கள் நேருக்கு நேர் மோத இருந்த பெரும் விபத்து தவிர்ப்பு


டெல்லி விமான நிலையத்தில் விமானங்கள் நேருக்கு நேர் மோத இருந்த பெரும் விபத்து தவிர்ப்பு
x
தினத்தந்தி 7 April 2017 9:51 AM GMT (Updated: 7 April 2017 9:50 AM GMT)

டெல்லி விமான நிலையத்தில் விமானங்கள் நேருக்கு நேர் மோத இருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

புதுடெல்லி,

டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில்  இன்று காலை 11.15 மணியளவில்  ஏர் இந்தியா விமானம் புறப்பட தயாராக இருந்தது. ஆனால், அதே நேரத்தில் இண்டிகோ விமானம் தரையிறங்க வந்து கொண்டிருந்தது. இதையடுத்து உடனடியாக விமான கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஏர் இந்தியா விமானம் புறப்பாட்டை நிறுத்துமாறும் விமானம் நிறுத்திவைக்கப்படும் இடத்திற்கு செல்லுமாறும் விமானியை  கேட்டுக்கொண்டனர். 

இதன்படி ஏர் இந்தியா விமானம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதையடுத்து இண்டிகோ விமானம் தரையிறங்கிய போது ஓடுபாதையில் எந்த வித தடங்கலும் இன்றி பத்திரமாக தரையிறங்கியது. இதன்பிறகு உரிய விதிமுறைகளை பின்பற்றி  ஏர் இந்தியா விமானம் புறப்பட்டு சென்றது. உரிய நேரத்தில் விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் செயல்பட்டு நடவடிக்கை எடுத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 

பிரதமர் நரேந்திர மோடி வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனாவை  இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு வந்து வரவேற்றார். பின்னர் நரேந்திர மோடி புறப்பட்டுச்சென்ற சிறிது நேரத்தில்  இந்த சம்பவம் நடைபெற்றது விமான நிலையத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story