விஜயபாஸ்கரின் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதை நாங்கள் தடுக்கவில்லை: வருமான வரித்துறை அதிகாரி விளக்கம்


விஜயபாஸ்கரின் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதை நாங்கள் தடுக்கவில்லை: வருமான வரித்துறை அதிகாரி  விளக்கம்
x
தினத்தந்தி 7 April 2017 2:12 PM GMT (Updated: 7 April 2017 2:12 PM GMT)

விஜயபாஸ்கரின் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதை நாங்கள் தடுக்கவில்லை என்று வருமான வரித்துறை அதிகாரி விளக்கம் அளித்துள்ளார்.

சென்னை,

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். வருமான வரித்துறை சோதனையின் போது அதிகாரிகள் அத்துமீறி செயல்பட்டதாகவும், தனது குழந்தைகள் பள்ளி செல்வதை கூட அவர்கள் அனுமதிக்கவில்லை என்று விஜயபாஸ்கர் குற்றம் சாட்டியிருந்தார். 

இந்த நிலையில் விஜயபாஸ்கரின் குற்றச்சாட்டு குறித்து வருமான வரித்துறை மூத்த அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். வருமான வரித்துறையின் மூத்த அதிகாரி ஜெயராகவன் இது குறித்து கூறியதாவது:- அமைச்சர் விஜயபாஸ்கரின் குழந்தைகள் பள்ளிக்கு செல்வதை நாங்கள் தடுக்கவில்லை. இல்லத்திற்கு வெளியே பதற்றமான சூழ்நிலை நிலவுவதால் குழந்தைகள் வெளியே செல்வது சரியாக இருக்காது என்று நாங்கள் கூறியதை விஜயபாஸ்கர் ஏற்றுக்கொண்டார். 

 யாருடைய தனிப்பட்ட சுதந்திரத்திலும் நாங்கள் தலையிடவில்லை. எப்படி நடந்துகொண்டோம் என்பதை சோதனைக்கு பின்பு விஜயபாஸ்கர் தெரிவிப்பார்” என்று தெரிவித்துள்ளார்.

Next Story