வேலைநிறுத்தம் தொடரும் என லாரி உரிமையாளர்கள் அறிவிப்பு


வேலைநிறுத்தம் தொடரும் என லாரி உரிமையாளர்கள் அறிவிப்பு
x
தினத்தந்தி 7 April 2017 4:15 PM GMT (Updated: 2017-04-07T21:45:02+05:30)

ஐதராபாத்தில் லாரிகளின் காப்பீட்டு கட்டணம் தொடர்பாக மத்திய அரசுடன், லாரி உரிமையாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து வேலைநிறுத்தம் தொடரும் என லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

ஐதராபாத்,

வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் தொகை உயர்வு, பெட்ரோல், டீசலுக்கான வாட் வரி உயர்வு போன்ற லாரி உரிமையாளர்களை பாதிக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகள் அறிவித்த நடவடிக்கைகளை கண்டித்து தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்கம் கடந்த மாதம் 30-ந் தேதி முதல் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகிறது.

இதனால் வடமாநிலங்களில் இருந்து உணவு பொருட் கள் உள்ளிட்டவை தமிழகத்துக்கு வருவது தடைபட்டு உள்ளது. அதேபோல் தமிழகத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு செல்லும் பொருட் களும் தேங்கி கிடக்கின்றன.

இந்நிலையில் ஐதராபாத்தில் லாரிகளின் காப்பீட்டு கட்டணம் தொடர்பாக மத்திய அரசுடன், லாரி உரிமையாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததை தொடர்ந்து லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் தொடரும் என்று தென்னிந்திய லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டமைப்பு தலைவர் சண்முகப்பா தெரிவித்துள்ளார்.

Next Story