தென்னிந்தியர்கள் பற்றி விமர்சனம் சர்ச்சையில் சிக்கிய முன்னாள் எம்.பி. தருண் விஜய்


தென்னிந்தியர்கள் பற்றி விமர்சனம் சர்ச்சையில் சிக்கிய முன்னாள் எம்.பி. தருண் விஜய்
x
தினத்தந்தி 7 April 2017 11:32 PM GMT (Updated: 7 April 2017 11:32 PM GMT)

பா.ஜனதா முன்னாள் எம்.பி. தருண் விஜய், கத்தார் நாட்டின் பிரபல அல் ஜஷீரா தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.

புதுடெல்லி,

பா.ஜனதா முன்னாள் எம்.பி. தருண் விஜய், கத்தார் நாட்டின் பிரபல அல் ஜஷீரா தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் டெல்லியில் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்த கருப்பர் இன மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் குறித்து இந்தியர்கள் நிற வெறியர்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதில் அளித்து தருண்விஜய் கூறும்போது,‘‘நாங்கள் நிறவெறியர்கள் என்றால் ஏன், தென்னிந்தியர்களான தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா மாநிலங்களில் வசிக்கும் கருப்பர்களுடன் சேர்ந்து வாழவேண்டும்?... எங்களை சுற்றி கருப்பர் இன மக்களும் இருக்கிறார்கள். இந்தியாவை நிறவெறி கொண்டவர்கள் என்று கூற முடியாது. ஏனென்றால் கடவுள் கிருஷ்ணரும் கருப்புதான். அதனால் அவர்களை (தென்னிந்தியர்கள்) நாங்கள் கருப்பு தெய்வங்களாகவே வழிபடுகிறோம்“ என்று குறிப்பிட்டார்.

தருண் விஜய்யின் இந்த கருத்து தென்னிந்திய மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பல்வேறு தென் மாநில அரசியல் கட்சி தலைவர்களும் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.

இதையடுத்து, ‘தான் தென்னிந்தியர்கள் பற்றி குறிப்பிட்டதற்காக மன்னிப்பு கேட்டு கொள்வதாக’ டுவிட்டரில் அவர் தெரிவித்தார். ‘எனது வார்த்தைகள் தவறாக அர்த்தம் கொண்ட வாக்கியமாக அமைந்துவிட்டது. அதற்காக வருந்துகிறேன்’ என்று தருண் விஜய் அதில் கூறி இருக்கிறார்.


Next Story