தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நாளை டெல்லி பயணம்


தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நாளை டெல்லி பயணம்
x
தினத்தந்தி 8 April 2017 4:46 PM GMT (Updated: 2017-04-08T22:16:35+05:30)

தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நாளை டெல்லி செல்கிறார்.

புதுடெல்லி,

ஆர்.கே.நகரில் பணம் பட்டுவாடா செய்யப்படுவது குறித்த அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் வருமானவரித்துறை ஒப்படைத்தது. வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா நடந்ததாகக் கூறப்படும் புகார் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையத்திடம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி விளக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து விளக்கம் அளிப்பதற்காக தமிழக தலைமைத்தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நாளை டெல்லி செல்கிறார். அப்போது இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி சந்தித்து விளக்கம் அளிப்பார். அதனை தொடர்ந்து  விக்ரம் பத்ரா உடன் நாளை மறுநாள் ஆலோசனை நடத்த உள்ளார். ஆலோசனைக்குபின் ஆர்.கே.நகர் தேர்தல் பற்றி முக்கிய அறிவிப்பு வெளியாக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story