ஓடும் பஸ்சில் மூதாட்டியை துப்பாக்கியால் சுட்ட வாலிபர் கைது


ஓடும் பஸ்சில் மூதாட்டியை துப்பாக்கியால் சுட்ட வாலிபர் கைது
x
தினத்தந்தி 8 April 2017 8:13 PM GMT (Updated: 2017-04-09T01:42:41+05:30)

செல்போனில் சத்தமாக பேசியதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மூதாட்டியை துப்பாக்கியால் சுட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.

தானே,

செல்போனில் சத்தமாக பேசியதால் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மூதாட்டியை துப்பாக்கியால் சுட்ட வாலிபர் கைது செய்யப்பட்டார்.

செல்போன் பேச்சால் வாக்குவாதம்

மும்பை போரிவிலி பகுதியை சேர்ந்த மூதாட்டி பார்வதி (வயது 70). இவர் நேற்று முன்தினம் தனது மருமகளுடன் தானே சென்றார். பின்னர் இரவு 8 மணியளவில் தானேயில் இருந்து அரசு பஸ் மூலம் போரிவிலிக்கு புறப்பட்டார்.

பஸ் தானே கோட்பந்தர் அருகே வந்த போது மூதாட்டியின் பின்னால் அமர்ந்து இருந்த வாலிபர் செல்போனில் சத்தமாக பேசினார். மூதாட்டி அந்த வாலிபரை அமைதியாக பேசுமாறு கூறினார். இதனால் 2 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

துப்பாக்கியால் சுட்டார்

இதனால் ஆத்திரமடைந்த வாலிபர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் மூதாட்டியை நோக்கி சுட்டார். இதில் குண்டு மூதாட்டியின் தோள் பட்டையில் பாய்ந்தது. சத்தம் கேட்டு டிரைவர் பஸ்சை சாலையோரம் நிறுத்தினார். இதையடுத்து தப்பியோட முயன்ற அந்த வாலிபரை பயணிகள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

போலீசார் அவரை கைது செய்து நடத்திய விசாரணையில் மூதாட்டியை துப்பாக்கியால் சுட்டவர் தானே, பத்லாப்பூர் பகுதியை சேர்ந்த சுமேத் ஸ்ரீராம் (33) என்பது தெரியவந்தது. இவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.அவருக்கு துப்பாக்கி எப்படி கிடைத்தது என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையே குண்டு பாய்ந்ததில் காயமடைந்த மூதாட்டி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Next Story