பெங்களூருவில் பெண் ஒப்பந்த ஊழியர் கற்பழிப்பு; தோட்டக்கலை துறை கூடுதல் இயக்குனர் கைது


பெங்களூருவில் பெண் ஒப்பந்த ஊழியர் கற்பழிப்பு; தோட்டக்கலை துறை கூடுதல் இயக்குனர் கைது
x
தினத்தந்தி 8 April 2017 10:11 PM GMT (Updated: 2017-04-09T03:41:04+05:30)

பெங்களூரு பசவேஸ்வரா நகரில் வசித்து வருபவர் கங்கப்பா (வயது 59). இவர் தோட்டக்கலை துறை அலுவலகத்தில் கூடுதல் இயக்குனராக பணியாற்றி வருகிறார்

பெங்களூரு,

பெங்களூரு பசவேஸ்வரா நகரில் வசித்து வருபவர் கங்கப்பா (வயது 59). இவர் அல்சூர் கேட் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள தோட்டக்கலை துறை அலுவலகத்தில் கூடுதல் இயக்குனராக பணியாற்றி வருகிறார். இவர் தோட்டக்கலை துறையில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்த 42 வயது பெண்ணை கற்பழித்ததாக தெரிகிறது. இதுகுறித்து அந்த பெண் தோட்டக்கலை துறை கமி‌ஷனர் பாண்டுரங்க நாயக் மற்றும் தோட்டக்கலை துறை இயக்குனர் சீனிவாஸ் ஆகியோரிடம் புகார் அளித்தார்.

ஆனால் அவர்கள் அந்த புகாரை ஏற்காமல், பணம் வாங்கிக் கொண்டு இதுபற்றி வெளியே யாரிடமும் கூறவேண்டாம் என்று அந்த பெண்ணிடம் வற்புறுத்தியதாக தெரிகிறது. இதையடுத்து அந்த பெண், அல்சூர் கேட் போலீசாரிடம் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தோட்டக்கலை துறை கூடுதல் இயக்குனர் கங்கப்பாவை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


Next Story