கேரளாவில் தெருநாய்கள் கடித்து குதறியதில் முதியவர் பலி


கேரளாவில் தெருநாய்கள் கடித்து குதறியதில் முதியவர் பலி
x
தினத்தந்தி 8 April 2017 11:14 PM GMT (Updated: 2017-04-09T04:43:40+05:30)

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் ஆட்டிங்கல் அருகேயுள்ள கிராமம், திருவிலம்.

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் ஆட்டிங்கல் அருகேயுள்ள கிராமம், திருவிலம். இந்த கிராமத்தை சேர்ந்த 85 வயது குன்னிகிருஷ்ணன் என்பவர் நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் தனது வீட்டில் உள்ளவர்களிடம் அருகில் உள்ள சலூனுக்கு சென்று முடிவெட்டி வருவதாக கூறிவிட்டுச் சென்றார்.

ஆனால் பலமணி நேரம் ஆகியும், அவர் வீடு திரும்பவில்லை. இதனால் குன்னிகிருஷ்ணனை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் அவரைத் தேடி அலைந்தனர். அப்போது ஓரிடத்தில் தெருநாய்கள் கடித்து குதறி இறந்த நிலையில் அவருடைய உடலை மீட்டனர். பின்னர் இச்சம்பவம் பற்றி போலீசாருக்கு தெரிவித்தனர்.

இதுபற்றி போலீசார் கூறுகையில், ‘‘குன்னிகிருஷ்ணனின் முகம், கழுத்து, தோள்பட்டை, வலது கை என உடல் முழுவதும் நாய்கள் கடித்து குதறியதற்கான அடையாளங்கள் இருந்தன’’ என்றனர்.

திருவனந்தபுரம் மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் மட்டும் தெருநாய்கள் கடித்து 10–க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story