கங்கை நதியை தூய்மைப்படுத்த ரூ.2,154 கோடி ஒதுக்கீடு மத்திய அரசு ஒப்புதல்


கங்கை நதியை தூய்மைப்படுத்த ரூ.2,154 கோடி ஒதுக்கீடு மத்திய அரசு ஒப்புதல்
x
தினத்தந்தி 9 April 2017 5:58 AM GMT (Updated: 9 April 2017 5:58 AM GMT)

கங்கையை சுத்தப்படுத்தும் 26 திட்டங்களுக்கு ரூ.2 ஆயிரத்து 154 கோடியே 28 லட்சம் ஒதுக்கீடு செய்து மத்திய அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.

புதுடெல்லி, 

கழிவுநீர், குப்பை போன்றவற்றால் மாசடைந்துள்ள கங்கை நதியை சுத்தப்படுத்த மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கங்கையை தூய்மைப்படுத்துவதற்காக மத்திய அரசு தேசிய திட்ட அமைப்பு ஒன்றை ஏற்படுத்தி உள்ளது. கங்கையை சுத்தப்படுத்தும் 26 திட்டங்களுக்கு ரூ.2 ஆயிரத்து 154 கோடியே 28 லட்சம் ஒதுக்கீடு செய்து இந்த அமைப்பு ஒப்புதல் வழங்கி இருக்கிறது. இதுதவிர உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கங்கையில் கலக்கும் கழிவு நீரை சுத்திகரிக்க சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.


Next Story