மத்திய பிரதேசத்தில் உடலுக்கு வெளியே இதயத்துடன் பிறந்த பெண் குழந்தை


மத்திய பிரதேசத்தில் உடலுக்கு வெளியே இதயத்துடன் பிறந்த பெண் குழந்தை
x

மத்திய பிரதேசத்தில் உடலுக்கு வெளியே துடிக்கும் இதயத்துடன் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

சத்தர்பூர்,

புதுடெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அந்த குழந்தை கொண்டு செல்லப்பட்டுள்ளது.  ஒவ்வொரு 10 லட்சம் குழந்தைகளில் 8 குழந்தைகளுக்கு மிக அரிய வகையிலான இதுபோன்ற குறையுடன் பிறக்கும் வாய்ப்பு உள்ளது என மருத்துவ வட்டாரம் தெரிவிக்கின்றது.

கடந்த ஏப்ரல் 5ந்தேதி கஜுராஹோ சுகாதார மையத்தில் எக்டோபியா கார்டிஸ் (உடலுக்கு வெளியே அமைந்துள்ள இதயம்) என்ற அரிய வகை குறையுடன் அந்த குழந்தை பிறந்துள்ளது.  அதன் தந்தையான அரவிந்த் பட்டேல் கஜுராஹோ நகரில் உள்ள உலக பாரம்பரிய மையத்தின் காவலராக இருக்கிறார்.

இதுபற்றி மருத்துவர் திரிபாதி கூறும்பொழுது, கடந்த 10 வருடத்தில் மாவட்டத்தில் இந்த குறையுடன் பிறந்த 2வது குழந்தை இது.  முதல் குழந்தை 5 வருடங்களுக்கு முன் இதுபோன்ற குறையுடன் பிறந்தது.  10 லட்சம் குழந்தைகளில் 8 குழந்தைகள் இந்த குறையுடன் பிறக்கும் என கூறியுள்ளார்.

கரு வளர்ச்சியின்பொழுது உடல் சுவர் உருவாக்கம ஆனது முறையாக முழுமை பெறுவதில் இருந்து தவறுவதனால் இந்த குறை ஏற்பட ஏதுவாகிறது.  இதனால் பகுதியாகவோ அல்லது உடலின் வெளியேயோ இதயம் அமைந்து விடுகிறது என அவர் கூறியுள்ளார்.

Next Story