விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய முடியாது முதல்–மந்திரி பேச்சு


விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய முடியாது முதல்–மந்திரி பேச்சு
x
தினத்தந்தி 9 April 2017 10:15 PM GMT (Updated: 2017-04-10T03:45:10+05:30)

விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய முடியாது என்று டி.வி. நிகழ்ச்சியில் முதல்–மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கூறினார்.

மும்பை,

பிரதமர் நரேந்திர மோடி ‘மன் கீ பாத்’ நிகழ்ச்சி மூலம் மாந்தோறும் வானொலி வாயிலாக நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். இதே பாணியை பின்பற்றி முதல்– மந்திரி தேவேந்திர பட்னாவிசும் ‘நான் முதல்–மந்திரி பேசுகிறேன்’ என்ற நிகழ்ச்சி மூலம் டி.டி. சகாய்த்ரி டி.வி. வாயிலாக பொதுமக்களிடம் உரையாற்ற தொடங்கி உள்ளார். இந்த நிகழ்ச்சியில் பேசுவதற்கு முன்னதாக முதல்– மந்திரி தேவேந்திர பட்னாவிசிடம் வாட்ஸ் அப், இ–மெயில் வாயிலாக பொதுமக்கள் 19 ஆயிரத்து 250 கேள்விகளை கேட்டு இருந்தனர்.

இதற்கு பதில் அளித்து முதல்– மந்திரி பேசி இருந்தார். இந்த நிகழ்ச்சி நேற்று சகாய்த்ரி டி.வி.யில் ஒளிபரப்பப்பட்டது. இதில், விவசாய கடன் குறித்த கேள்விக்கு பதில் அளித்த முதல்– மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், தற்போது உள்ள சூழலில் விவசாய கடனை முழுமையாக அரசால் தள்ளுபடி செய்ய முடியாது. இதை விவசாயிகள் புரிந்து கொள்ளவேண்டும் என கூறினார்.


Next Story