தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது


தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது
x
தினத்தந்தி 9 April 2017 11:38 PM GMT (Updated: 2017-04-10T05:08:06+05:30)

பாரதீய ஜனதா தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் டெல்லியில் இன்று மாலை நடைபெறுகிறது.

புதுடெல்லி,

பாரதீய ஜனதா தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் டெல்லியில் இன்று (திங்கட்கிழமை) மாலை நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடி, பாரதீய ஜனதா தலைவர் அமித்ஷா, மற்றும் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்ளும் இந்த கூட்டத்தில் தற்போதைய அரசியல் சூழ்நிலைகள் குறித்தும், கூட்டணியின் எதிர்கால திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட இருப்பதாக நேற்று பாரதீய ஜனதா வட்டாரங்கள் தெரிவித்தன.

2014–ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகு தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் கூட்டம் நடைபெறுவது இது 2–வது முறை ஆகும்.


Next Story