எல்லையில் ஊடுருவ முயன்ற 4 பாகிஸ்தான் பயங்கரவாதிகளை ராணுவம் சுட்டுக் கொன்றது


எல்லையில் ஊடுருவ முயன்ற 4 பாகிஸ்தான் பயங்கரவாதிகளை ராணுவம் சுட்டுக் கொன்றது
x
தினத்தந்தி 10 April 2017 3:42 AM GMT (Updated: 2017-04-10T09:12:26+05:30)

ஜம்மு காஷ்மீரில் எல்லையில் ஊடுருவ முயன்ற 4 பாகிஸ்தான் பயங்கரவாதிகளை எல்லைப் பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தியது.


ஸ்ரீநகர், 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைதியின்மையை நிலைத்திருக்க செய்ய பாகிஸ்தான் அரசு ஆதரவு பெற்ற பயங்கரவாத இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன. பயங்கரவாதிகள் பாகிஸ்தான் ராணுவத்தின் உதவியுடன் இந்தியாவிற்கு நுழைய முயற்சி செய்கிறார்கள்.  அவர்களை அவ்வபோது இந்திய ராணுவம் வேட்டையாடுகிறது. இன்று எல்லையில் கெரான் செக்டாரில் பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சி செய்தார்கள், இந்திய ராணுவம் பலமுறை அவர்களை எச்சரித்தது, பின்னர் ஏற்பட்ட சண்டையில் 4 பயங்கரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டனர். 


Next Story