காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஒத்திவைப்பு


காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 11 April 2017 3:09 AM GMT (Updated: 2017-04-11T08:38:40+05:30)

காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.


புதுடெல்லி, 

காஷ்மீர் மாநிலம் அனந்தநாக் பாராளுமன்ற தொகுதிக்கு நாளை (புதன்கிழமை) இடைத்தேர்தல் நடப்பதாக இருந்தது. இந்நிலையில், இந்த இடைத்தேர்தலை மே 25–ந் தேதிக்கு தேர்தல் கமி‌ஷன் நேற்று ஒத்திவைத்தது. நேற்றுமுன்தினம் நடைபெற்ற ஸ்ரீநகர் பாராளுமன்ற தொகுதி இடைத்தேர்தலின்போது வன்முறை வெடித்ததால், இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிகிறது.

அதுபோல், ஸ்ரீநகர் இடைத்தேர்தலில் வன்முறை அதிகம் நிகழ்ந்த ஓட்டுச்சாவடிகளில் மறுஓட்டுப்பதிவு நடத்துவது பற்றி தேர்தல் கமி‌ஷன் விரைவில் முடிவு எடுக்க உள்ளது. அத்தொகுதியில் வெறும் 7.14 சதவீத ஓட்டுகளே பதிவாகின. துப்பாக்கி சூட்டில் 8 பேர் பலியானார்கள்.


Next Story