அவதூறு வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக ஜாமீனில் வரக்கூடிய பிடிவாரண்ட் பிறப்பிப்பு


அவதூறு வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக ஜாமீனில் வரக்கூடிய பிடிவாரண்ட் பிறப்பிப்பு
x
தினத்தந்தி 11 April 2017 3:52 AM GMT (Updated: 11 April 2017 3:52 AM GMT)

அவதூறு வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக ஜாமீனில் வெளிவரக்கூடிய பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கவுகாத்தி,

பிரதமர் நரேந்திரமோடியின் பட்டப்படிப்பு குறித்து பல்வேறு சந்தேகங்களை கிளப்பிய டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், மோடியின் சான்றிதழ்கள் அனைத்தும் போலியானவை என்று விமர்சனம் செய்து இருந்தார். 

இதனையடுத்து அரவிந்த் கெஜ்ரிவால் மீது பாரதீய ஜனதா கட்சி பிரமுகர் ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.  இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு கெஜ்ரிவாலுக்கு இரண்டு முறை சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. இதனையடுத்து கெஜ்ரிவாலுக்கு எதிராக ஜாமினில் வெளிவரக்கூடிய வாரண்ட் பிறப்பித்து அசாம் நீதிமன்றம், வழக்கின் அடுத்த விசாரணையை வரும் மே 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது.

Next Story