பெங்களூர் சிறையில் சசிகலாவை சந்திக்க அமைச்சர்களுக்கு தடை


பெங்களூர் சிறையில் சசிகலாவை சந்திக்க அமைச்சர்களுக்கு தடை
x
தினத்தந்தி 11 April 2017 5:11 AM GMT (Updated: 2017-04-11T10:41:05+05:30)

பெங்களூர் சிறையில் சசிகலாவை சந்திக்க அமைச்சர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டு உள்ளது.


சென்னை,

வருமானத்துக்கு அதிக மாக முறைகேடாக சொத்து சேர்த்த வழக்கில் 4 ஆண்டுகள் தண்டனை பெற்றுள்ள  சசிகலா பெங்களூர்  பரப்பன அக்ரஹார ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் என்ற முறையில் அவரை அ.தி.மு.க. நிர்வாகி கள் அடிக்கடி சந்தித்து பேசி வருகிறார்கள்.

ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடப்பதை காரணம் காட்டி அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் சசிகலாவை சந்திப்பதை வழக்கத்தில் வைத்திருந்தனர். தற்போது ஆர்.கே.நகர் தேர்தல் ரத்தாகி விட்டதால் இனி அப்படி சந்திப்பதற்கான வாய்ப்பும் முடங்கி விட்டது.

இதற்கிடையே சசிகலாவை சந்திக்க வரும் அ.தி. மு.க.வினரை சிறைத்துறை அதிகாரிகள் திருப்பி அனுப்பி வருகிறார்கள். இது தொடர்பாக சிறைத்துறை அதிகாரி ஒருவர் கூறியதா வது:-

சசிகலா விஷயத்தில் எந்த விதி மீறலும் நடக்கவில்லை. மற்ற கைதிகளை நடத்துவதை போலவே சசிகலாவையும் நடத்தி வருகிறோம்.சசிகலா இந்த சிறைக்கு வந்த புதிதில் தினமும் அவரை பார்க்க நிறைய பேர் வந்த வண்ணம் இருந்தனர். இனி பார்வையாளர்கள் எண்ணிக்கை குறையும்.

நாங்களும் சசிகலாவை சந்திக்க வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கையை குறைக்கத் தொடங்கி உள்ளோம். எண்ணிக்கை அதிகரித்தால் உடனுக்குடன் திருப்பி அனுப்பும் நடவடிக்கை எடுக்கப்படும்.

அ.தி.மு.க. அமைச்சர்கள், எம்.பி.க்களை கூட நாங்கள் திருப்பி அனுப்ப தொடங்கி இருக்கிறோம். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார். கர்நாடக மாநில சிறைத் துறையின் இந்த திடீர் நடவடிக்கை, சசிகலாவை அடிக்கடி சிறையில் சந்தித்து பேசி வந்த அ.தி.மு.க. மூத்த தலைவர்களிடம் அதிருப்தியையும் ஆதங்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


Next Story