டெல்லியில் தமிழக விவசாயிகளுடன் பிரேமலதா விஜயகாந்த் மண் சோறு சாப்பிட்டு போராட்டம்


டெல்லியில் தமிழக விவசாயிகளுடன் பிரேமலதா விஜயகாந்த் மண் சோறு சாப்பிட்டு போராட்டம்
x
தினத்தந்தி 11 April 2017 10:09 AM GMT (Updated: 2017-04-11T15:39:09+05:30)

டெல்லியில் விவசாயிகளுடன், பிரேமலதா விஜயகாந்தும் மண்சோறு சாப்பிட்டு ஆதரவு தெரிவித்தார்.

புதுடெல்லி


தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கம் சார்பில் அதன் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் டெல்லியில் கடந்த மாதம் 14–ந் தேதி முதல் தமிழக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், விவசாய கடன்களை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக அவர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த போராட்டம் நேற்று 28–வது நாளாக நடைபெற்றது. நேற்று பகல் 12 மணி அளவில், போராட்டம் நடைபெற்று வரும் ஜந்தர்மந்தர் பகுதியில் இருந்து போலீஸ் வாகனம் மூலம் அய்யாக்கண்ணு உள்பட 9 விவசாயிகள் பிரதமர் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்கள் வேட்டி–சட்டை அணிந்து இருந்தனர்.

பிரதமர் அலுவலகத்தின் உள்ளே அய்யாக்கண்ணு மட்டும் அனுமதிக்கப்பட்டார். அவர் ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த கோரிக்கை மனுவை அங்கிருந்த அதிகாரியிடம் கொடுத்தார். அதன்பிறகு அவரும் மற்ற விவசாயிகளும் போலீஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டனர். வாகனம் ஜனாதிபதி மாளிகை, பிரதமர் அலுவலகம், உள்துறை அமைச்சம் அமைந்துள்ள ராஜபாதை சாலை வழியாக ஜந்தர்மந்தர் நோக்கி சென்றது.

அப்போது 3 விவசாயிகள் ராஜபாதை ரோட்டில் உருண்டு, புரண்டு ஆர்ப்பரித்தனர். முழு நிர்வாண கோலத்தில் இவர்கள் நடத்திய போராட்டத்தால் அந்த பகுதி மிகவும் பரபரப்பானது. அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த அரசு அதிகாரிகள், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்களில் பலர் கூடி நின்று வேடிக்கை பார்த்தனர்.

இதற்கிடையே, போராட்டக்குழு தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்ட மற்ற விவசாயிகளும் வாகனத்தில் இருந்து இறங்கி முழு நிர்வாண போராட்டத்துக்கு தயார் ஆனார்கள். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி வாகனத்தில் ஏற்றினார்கள். அத்துடன் முழு நிர்வாணமாக ஓடிய 3 பேரையும் பிடித்து வாகனத்தில் ஏற்றினார்கள்.

அதன்பிறகு அந்த வாகனம் மீண்டும் ஜந்தர்மந்தர் பகுதிக்கு சென்றது. அங்கு விவசாயிகள் இறக்கி விடப்பட்டனர். நேற்று தி.மு.க எம்பி திருச்சி சிவா, காங்கிரஸ் தலைவர் நக்மா ஆகியோர் விவசாயிகளை நேரில் பார்த்து ஆதரவு தெரிவித்தனர்.

இன்று தமிழக விவசாயிகள் 29 வது நாளாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று தே.மு.தி.அக் தலைஅவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா போர்ராட்டம் நடத்திவரும் தமிழக விவசாயிகளை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். அவர்களுடன் அமார்ந்து மண் சோறு சாப்பிடும் போரட்டத்தில் கலந்து கொண்டார்.  

பின்னர் அவர் நிருபர்களீடம் கூறியதாவது:

தேசிய நெடுஞ்சாலைகள் போல் தேசிய நதிகளையும் ஒன்றாக இணைக்க வேண்டும்.விவசாயிகளின் நிர்வாணப் போராட்டம் தமிழகத்திற்கு ஏற்பட்ட தலைகுனிவு.பல ஆண்டுகளாக சரியான நிர்வாகம் இல்லாததால் தமிழகத்தில் கடும் வறட்சி ஏற்பட்டு உள்ளது.தமிழகத்தில் உள்ள அனைத்து நீர் நிலைகளையும் தூர்வார வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story