பாகிஸ்தானில் தாக்குதல் நடத்திய பின்னர் பயங்கரவாத தாக்குதல் குறைந்து உள்ளது - மத்திய அரசு


பாகிஸ்தானில் தாக்குதல் நடத்திய பின்னர் பயங்கரவாத தாக்குதல் குறைந்து உள்ளது - மத்திய அரசு
x
தினத்தந்தி 11 April 2017 10:46 AM GMT (Updated: 11 April 2017 10:45 AM GMT)

பாகிஸ்தானில் தாக்குதல் நடத்திய பின்னர் பயங்கரவாத தாக்குதல்கள் குறைந்து உள்ளது என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

புதுடெல்லி,

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் கடந்த வருடம் பாகிஸ்தான் ராணுவ ஆதரவு பயங்கரவாத முகாம்களில் அதிரடியாக துல்லிய தாக்குதலை நடத்தியது. இதனையடுத்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 25 சதவிதம் பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் குறைந்து உள்ளது என மத்திய அரசு தெரிவித்து உள்ளது. மக்களவையில் பேசிய உள்துறை இணை மந்திரி ஹன்ஸ்ராஜ் அகிர், கடந்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரையில் ஜம்மு காஷ்மீரில் 193 பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் நடந்தது என்றார். 

கடந்த வருடம் அக்டோபர் மாதம் முதல் இவ்வருடம் மார்ச் 31-ம் தேதி வரையில் 155 பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் நடந்தது என்று கூறிஉள்ளார் ஹன்ஸ்ராஜ் அகிர். கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 29-ம் தேதி பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் துல்லிய தாக்குதலை நடத்தியது. இதனையடுத்து ஜம்மு காஷ்மீரில் கற்கள் வீசும் சம்பவமும் வெகுவாக குறைந்து உள்ளது என்றும் மத்திய அரசு கூறிஉள்ளது.

கடந்த வருடம் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையில் 2,325 கற்கள் வீச்சு சம்பவங்கள் நடந்தது, ஆனால் அடுத்த ஆறு மாதங்களில் இது 411 ஆக குறைந்தது என மத்திய அரசு தெரிவித்து உள்ளது. கடந்த வருடம் எல்லையில் 371 ஊடுருவல் முயற்சியானது நடந்து உள்ளது, இதில் 118 பயங்கரவாதிகளால் ஊடுருவ முடிந்து உள்ளது, 217 பயங்கரவாதிகள் பதிலடியால் திரும்பிவிட்டனர். 35 பயங்கரவாதிகளை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது, 3 பயங்கரவாதிகள் ஊடுருவ முயன்ற போது கைது செய்யப்பட்டனர். இவ்வருடம் பிப்ரவரி மாதம் வரையில் எல்லையில் 43 ஊடுருவல் முயற்சியானது முன்னெடுக்கப்பட்டு உள்ளது, 9 பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவியிருக்கலாம், 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 35 பயங்கரவாதிகள் திரும்பி சென்றனர் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது. 

2016-ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் 20 பயங்கரவாத தாக்குதல்கள் நடந்து உள்ளது, இதில் 11 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்தனர். பொதுமக்களில் ஒருவர் உயிரிழந்தார். 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் வரையில் எல்லைப்பகுதியில் நான்கு பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டு உள்ளது, இதில் பொதுமக்கள் உயிரிழந்து உள்ளனர் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது. 

Next Story