உள்நாட்டிலேயே தயாரான இந்திய தொழிற்சாலைகளில் பயன்பட கூடிய முதல் ரோபோ


உள்நாட்டிலேயே தயாரான இந்திய தொழிற்சாலைகளில் பயன்பட கூடிய முதல் ரோபோ
x
தினத்தந்தி 11 April 2017 6:46 PM GMT (Updated: 2017-04-12T01:05:54+05:30)

பிரபல டாடா நிறுவனங்களில் ஒன்றான டி.ஏ.எல். சிறிய தொழிலகங்கள் முதல் பெரிய தொழிற்சாலைகள் வரை பயன்படுத்தக்கூடிய பிராபோஸ் என்ற பெயரிடப்பட்ட ரோபோ ஒன்றை உள்நாட்டிலேயே வடிவமைத்து, தயாரித்துள்ளது.

மும்பை,

இதன் மூலம் 30 சதவீதம் வரை உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.

இரண்டு கிலோ முதல் பத்து கிலோ வரை எடைகளை கையாளக்கூடிய இந்த ரோபோக்கள் முறையே ரூ.5 இலட்சம், ரூ.7 இலட்சம் வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. இந்த ரோபோக்களை தயாரிக்க ரூ.10 கோடி வரை இந்நிறுவனம் முதலீடு செய்துள்ளது. இதர ரோபோக்களை விட 30-40 சதவீதம் வரை மலிவானது என்றும் கூறப்படுகிறது. நிறுவனம் ஏற்கனவே 25 ரோபோக்களை விற்றுள்ளது. மேலும் 30 ரோபோக்களை பரிசோதனை முறையில் பல நிறுவனங்களில் நிறுவியுள்ளது. இந்த ரோபோக்களின் உதிரிபாகங்களை தயாரிக்க இத்தாலி நிறுவனம் ஒன்றுடனும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என்கின்றனர் நிறுவன அதிகாரிகள்.

மனிதர்களுக்கு பதிலாக அதிக எண்ணிக்கையிலான வேலைகள், ஆபத்தான, அதிக நேரம் தேவைப்படக்கூடிய பணிகளை எளிதாக முடித்துவிடக்கூடியவை என்று தெரிவிக்கப்படுகிறது. பல நுணுக்கமான பணிகளையும் இவை செய்யும் என்று கூறப்படுகிறது. இந்த ரோபோக்கள் ஐரோப்பிய தரத்திற்கும் ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ளதால் ஏற்றுமதியும் செய்யப்படவும் வாய்ப்புள்ளது என்கின்றனர் அதிகாரிகள்.

Next Story