உ.பியில் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம்: முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் அதிரடி


உ.பியில் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம்: முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் அதிரடி
x
தினத்தந்தி 12 April 2017 3:26 AM GMT (Updated: 12 April 2017 3:26 AM GMT)

உ.பியில் 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும் என்று யோகி ஆதித்யநாத் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

லக்னோ,

அண்மையில் நடைபெற்று முடிந்த  உத்தர பிரதேச சட்ட மன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. அம்மாநில முதல் மந்திரியாக யோகி ஆதித்யநாத் பொறுப்பேற்றுக்கொண்டார். யோகி ஆதித்யநாத் பதவி ஏற்றது முதல் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற முதல் அமைச்சரவை கூட்டத்தின் போது, 35,359 கோடி மதிப்பிலான விவசாய கடன்களை தள்ளுபடி  செய்வதற்கான அதிரடி வெளியிட்டார். 

இந்த நிலையில், யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசின் இரண்டாவது அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தடையில்லா மின்சாரம் வழங்கப்படுவது குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.  இந்த கூட்டத்தில் யோகி ஆதித்யநாத் கூறுகையில், “மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும், தினமும், 24 மணி நேரமும், கிராமங்களில், 18 மணி நேரமும் மின்விநியோகம் வழங்கப்பட வேண்டும். மாணவர்களின் நலன் கருதி கிராமப்புறங்களில் மாலை, 6:00 முதல், காலை, 6:00 மணி வரை தடையில்லா மின்சாரம் வழங்கப்படும்” இவ்வாறு அவர் கூறினார். 

இது குறித்து உத்தர பிரதேச மின்சாரத்துறை மந்திரி இது பற்றி கூறுகையில், “ பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் அமித் ஷா மற்றும் முதல் மந்திரியின் கனவு திட்டம் இதுவாகும். 2018 ஆம் ஆண்டில் அனைத்து கிராமங்களும் அனைத்து இல்லங்களும் மின் சக்தியை பெறும்” என்றார்.

Next Story