கேரளாவின் மலப்புரம் மக்களவை தொகுதியில் இடைத்தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு


கேரளாவின் மலப்புரம் மக்களவை தொகுதியில் இடைத்தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு
x
தினத்தந்தி 12 April 2017 4:34 AM GMT (Updated: 2017-04-12T10:04:14+05:30)

கேரளாவின் மலப்புரம் மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தல் இன்று வாக்குப்பதிவு துவங்கியது. வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்


திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் மலப்புரம் தொகுதி எம்.பி.யாக இருந்த அகமது மரணமடைந்தார். இதை தொடர்ந்து அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன் படி இன்று காலை முதல் இடைத்தேர்தலில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதையொட்டி, அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

மலப்புரம் தொகுதியில் மும்முனை போட்டி நிலவுகிறது. மரணமடைந்த முன்னாள் எம்.பி. அகமது முஸ்லீம் கட்சியை சேர்ந்தவர். இந்த கட்சி காங்கிரசுடன் கூட்டணி வைத்து கடந்த தேர்தலில் போட்டியிட்டது. இதனால் இடைத்தேர்தலில் அந்த கட்சிக்கே மலப்புரம் தொகுதியை காங்கிரஸ் கட்சி விட்டுக் கொடுத்தது. இதை தொடர்ந்து முஸ்லிம் லீக் வேட்பாளராக குஞ்சாலி குட்டி அறிவிக்கப்பட்டார்.

இந்த இடைத்தேர்தலுக்கு 1,100 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது.  கிட்டத்தட்ட 13 லட்சம் வாக்களர்கள் இந்த இடைத்தேர்தலில் ஓட்டுப் போடுகிறார்கள். காலை முதலே வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

Next Story