உ.பி.யில் வீட்டிற்குள் புகுந்து இஸ்லாமிய ஜோடியை தாக்கிய ஆதித்யநாத்தின் யுவா வாகினி அமைப்பினர்


உ.பி.யில் வீட்டிற்குள் புகுந்து இஸ்லாமிய ஜோடியை தாக்கிய ஆதித்யநாத்தின் யுவா வாகினி அமைப்பினர்
x
தினத்தந்தி 12 April 2017 8:37 AM GMT (Updated: 2017-04-12T14:06:57+05:30)

உத்தரபிரதேசம் மாநிலத்தில் இந்து யுவா வாகினி அமைப்பினர் வீட்டிற்குள் புகுந்து இஸ்லாமிய ஜோடியை தாக்கியதால் பதற்றம் ஏற்பட்டு உள்ளது.

லக்னோ,

உத்தபிரதேச மாநிலம் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தின் யுவா வாகினி அமைப்பை சேர்ந்தவர்கள் மீரட் மாவட்டம் சாஸ்திரி நகர் பகுதியில் வீடு ஒன்றிற்குள் புகுந்து, நெருக்கமாக இருந்த இஸ்லாமிய ஜோடியை அடித்து வெளியே இழுத்து வந்து உள்ளனர் என தகவல்கள் தெரிவித்து உள்ளன. இந்து யுவா வாகினி அமைப்பினர் மற்றும் அப்பகுதியை சேர்ந்தவர்கள் ஜோடியை போலீசிடம் ஒப்படைத்து உள்ளனர். இந்து யுவா வாகினி அமைப்பினரால் தாக்கப்பட்டவர் வாசிம் என தெரியவந்து உள்ளது. ஆனால் ஜோடியை யாரும் தாக்கவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

உள்ளூர் மக்கள் மற்றும் இந்து யுவா வாகினி அமைப்பினர் வீட்டிற்குள் நெருக்கமாக இருந்த ஜோடியை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர் என உள்ளூர் போலீஸ் அதிகாரி அலோக் பிரியதர்ஷி கூறிஉள்ளார். இஸ்லாமிய ஜோடி பின்னர் விடுவிக்கப்பட்டது என்றும் போலீஸ் தெரிவித்து உள்ளது.

Next Story