வயநாட்டில் கொட்டிய ஆலங்கட்டி மழையால் 12 மணிநேரம் சாலைகள் பனிகட்டிகளால் மூடப்பட்டிருந்தது!


வயநாட்டில் கொட்டிய ஆலங்கட்டி மழையால் 12 மணிநேரம் சாலைகள் பனிகட்டிகளால் மூடப்பட்டிருந்தது!
x
தினத்தந்தி 3 May 2017 8:00 AM GMT (Updated: 3 May 2017 8:00 AM GMT)

வயநாட்டில் 25 ஆண்டுகளில் அதிகமான ஆலங்கட்டி மழையானது பெய்து உள்ளது. இதனால் சாலைகள் சுமார் 12 மணி நேரங்கள் பனிகட்டிகளால் மூடப்பட்டு இருந்து உள்ளது.

திருவனந்தபுரம், 

 கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கடந்த திங்கள் கிழமை இரவு, கோடை மழையுடன் ஆலங்கட்டி மழையும் பெய்து உள்ளது.

ஆலங்கட்டி மழைகாரணமாக அப்பகுதி முழுவதும் அழகாக சிறு, சிறு பனிகட்டிகளால் மூடிய வண்ணம் காட்சி அளித்து உள்ளது.

ஆலங்கட்டி மழையினால் சாலைகள் மற்றும் வீடுகளின் மேற்குபகுதிகள் பனிகட்டியால் மூடப்பட்டது. பனிகட்டிகளானது செவ்வாய் கிழமை காலைவரையில் உருகவில்லை. வயநாடு பகுதிகளில் கடந்த வாரத்தில் இருந்தே லேசான ஆலங்கட்டி மழை பெய்து வருகிறது.

மாவட்டத்தில் மிதமான ஆலங்கட்டி மழை பெய்வது வழக்கமானது. ஆனால் கடந்த 25 ஆண்டுகளில் இப்போது அதிகமான அளவு ஆலங்கட்டி மழையானது பெய்து உள்ளது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக ஆலங்கட்டி மழையாது பெய்து உள்ளது.

ஆலங்கட்டி மழையின் காரணமாக மாவட்டத்தில் பயிர் செய்யப்பட்டு இருந்த விளைப்பொருட்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக தெரியவந்து உள்ளது.

இடுக்கி மாவட்டத்திலும் ஆலங்கட்டி மழையானது பெய்து உள்ளது. எல்லா வருடமும் இங்கு ஆலங்கட்டி மழையானது பெய்து வருகிறது.

இடுக்கி மாவட்டம் 7 வருடங்களுக்கு முன்னதாக அதிகமான ஆலங்கட்டி மழையை எதிர்க்கொண்டது, அப்போது பயிர்களுக்கு பெரும் சேதம் ஏற்பட்டது.

Next Story