64-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா:சிறந்த பாடலாசிரியருக்கான விருதை கவிஞர் வைரமுத்து பெற்றார்


64-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா:சிறந்த பாடலாசிரியருக்கான விருதை கவிஞர் வைரமுத்து பெற்றார்
x
தினத்தந்தி 3 May 2017 1:34 PM GMT (Updated: 3 May 2017 1:34 PM GMT)

64-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்றது.ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்கி வருகினார்.

புதுடெல்லி,

டெல்லியில் 64-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்றது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விருதுகளை வழங்கி வருகினார். சிறந்த தமிழ் திரைப்படமாக "ஜோக்கர்" தேசிய விருது வழங்கப்பட்டது. தமிழில் சிறந்த படத்துக்கான விருதை ஜோக்கருக்காக ராஜூ முருகன் பெற்றார்.

சிறந்த பாடலாசிரியருக்கான விருதை கவிஞர் வைரமுத்து மற்றும் சிறந்த பின்னணி பாடகருக்கான விருதை ஜோக்கர் படத்தின் சுந்தர் ஐயர் பெற்றனர். சிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை கவிஞர் வைரமுத்து பெற்றார்.

தெலுங்கு படமான ஜனதா கேரஜ்க்காக நடன இயக்குனர் ராஜூ சுந்தரம் சிறந்த தேசிய விருதை பெற்றார். ஜோக்கர் திரைப்பட இயக்குனர் ராஜூ முருகன் தேசிய விருதை பெற்றார். புலி முருகன் படத்திற்கான சண்டை பயிற்சியாளர் பீட்டர் ஹெயினுக்கு விருது வழங்கப்பட்டது.

Next Story