இந்தியாவில் 10 ஆண்டுகளில் ரூ.49 லட்சம் கோடி கருப்பு பணம் ஊடுருவல்


இந்தியாவில் 10 ஆண்டுகளில் ரூ.49 லட்சம் கோடி கருப்பு பணம் ஊடுருவல்
x
தினத்தந்தி 3 May 2017 9:30 PM GMT (Updated: 3 May 2017 8:42 PM GMT)

இந்தியாவில் 10 ஆண்டுகளில் ரூ.49 லட்சம் கோடி கருப்பு பணம் ஊடுருவி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவுக்குள் 2005–ம் ஆண்டு முதல் 2014–ம் ஆண்டு வரையிலான 10 ஆண்டு காலத்தில் சட்ட விரோதமாக 770 பில்லியன் டாலர் கருப்பு பணம் (சுமார் ரூ.49 லட்சத்து 28 ஆயிரம் கோடி) ஊடுருவி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதே நேரத்தில் நாட்டில் இருந்து இந்த கால கட்டத்தில் 165 பில்லியன் டாலர் கருப்பு பணம் (சுமார் ரூ.10 லட்சத்து 56 ஆயிரம் கோடி) வெளியேறி உள்ளது.

இது தொடர்பாக அமெரிக்காவை சேர்ந்த ஜி.எப்.ஐ. என்ற உலகளாவிய சிந்தனை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் 2014–ம் ஆண்டு மட்டுமே 101 பில்லியன் டாலர் கருப்பு பணம் (சுமார் ரூ.6 லட்சத்து 46 ஆயிரத்து 400 கோடி) நாட்டினுள் வந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இதே ஆண்டில் நாட்டில் இருந்து வெளியேறிய கருப்பு பணம் 23 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1 லட்சத்து 47 ஆயிரத்து 200 கோடி) என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில், வளர்ந்து வரும் நாடுகளில் எந்தளவுக்கு கருப்பு பணம் உள்ளே வருகிறது, வெளியே செல்கிறது என்பது பற்றி இடம் பெற்றுள்ள தகவல்கள் அதிர வைப்பதாக அமைந்துள்ளன.


Next Story