பெண்களுடன் மேடையில் ஆட்டம் போட்ட போதை போலீஸ்


பெண்களுடன் மேடையில் ஆட்டம் போட்ட போதை போலீஸ்
x
தினத்தந்தி 4 May 2017 9:56 AM GMT (Updated: 2017-05-04T15:26:34+05:30)

உத்தரபிரதேசத்தில் பணி நேரத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் போதையில் மேடையேறி நடனக்கலைஞர்களுக்கு இணையாக குத்தாட்டம் போட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

லக்னோ

உத்தரபிரதேசத்தின் ஷ்ரவஸ்தி மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பெண் நடனக் கலைஞர்கள் மேடையில் நடனமாடிக் கெண்டிருந்தனர். அப்போது மேடையேறி வந்த போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காவல் சீருடையிலேயே மதுபோதையுடன் வந்து  நடனமாடியுள்ளார்.

பெண் கலைஞர்கள் நடனமாடிக் கொண்டிருந்த போது திடீரென மேடையேறிய கான்ஸ்டபிளை பார்த்து பயந்த நடனக் கலைஞர்கள் அவருக்கு வழிவிட்டு ஒதுங்கி நிற்க அவர்களை நடனமாடச் சொல்லி தானும் ஆட்டம்  போட்டுள்ளார். ஆட்டத்தின் இறுதியில் தான் வைத்திருந்த ரூபாய் நோட்டுகளை தூக்கி வீசி உற்சாக நடனமாடியுள்ளார்.

ஒழுக்கத்தை கடைபிடிக்கும் அந்த மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கான்ஸ்டபிள் குத்தாட்டத்தை  கட்டாயமாக பார்க்கக் கூடாது என்று கிண்டல் செய்து சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது.Next Story