சகோதரிகளின் மானம் காக்க உயிர்த்தியாகம் செய்த சகோதரன்


சகோதரிகளின் மானம் காக்க உயிர்த்தியாகம் செய்த சகோதரன்
x
தினத்தந்தி 4 May 2017 11:06 AM GMT (Updated: 2017-05-04T16:36:07+05:30)

அண்ணன் ஒருவன் மர்ம கும்பலிடமிருந்து சகோதரிகளின் மானத்தை பாதுகாக்க உயிர் தியாகம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உத்தரபிரதேச மாநிலம்  மதுரா பகுதியில் சம்பவத்தன்று இரவு சந்திரசேகர் என்பவர் தனது இரண்டு சகோதரிகளுடன் சாட்டா கிராமத்திலிருந்து டேக்  பகுதிக்கு பயணம் செய்துள்ளார்.

பயணத்தின் போது அவர்களை வழிமறித்த மர்ம கும்பல் கொள்ளையடிக்க முயற்சி செய்ததுடன் சகோதரிகளை பாலியல் ரீதியல் துன்புறுத்த முயன்றுள்ளனர்.

சந்திரசேகர் சகோதரிகளை பாதுகாக்க முயன்ற போது அவரை சுட்டுக்கொன்ற மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளது.

சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story