ஜம்மு மற்றும் காஷ்மீரில் ராணுவ வீரர்கள் மீது திடீர் தாக்குதல்; பொதுமக்களில் ஒருவர் பலி


ஜம்மு மற்றும் காஷ்மீரில் ராணுவ வீரர்கள் மீது திடீர் தாக்குதல்; பொதுமக்களில் ஒருவர் பலி
x
தினத்தந்தி 4 May 2017 4:18 PM GMT (Updated: 2017-05-04T21:48:05+05:30)

ஜம்மு மற்றும் காஷ்மீரில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பொதுமக்களில் ஒருவர் கொல்லப்பட்டார்.

சோபியான்,

ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஷோபியான் மாவட்டத்தில் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்துள்ளனர்.  இந்நிலையில், அவர்கள் மீது தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.  இதில் பொதுமக்களில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.

ராணுவ வீரர்கள் மீது நடைபெற்ற தாக்குதலை தொடர்ந்து தீவிரவாதிகள் மீது பதிலடி தாக்குதல் நடந்து வருகிறது.

Next Story