உ.பி.யில் டெம்போ சாலையில் இருந்து விலகிசென்று கால்வாய்க்குள் விழுந்தது, 14 பேர் உயிரிழப்பு


உ.பி.யில் டெம்போ சாலையில் இருந்து விலகிசென்று கால்வாய்க்குள் விழுந்தது, 14 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 5 May 2017 3:46 AM GMT (Updated: 2017-05-05T09:16:35+05:30)

உத்தரபிரதேசத்தில் டெம்போ சாலையில் இருந்து விலகிசென்று கால்வாய்க்குள் விழுந்து விபத்து நேரிட்டதில் 14 பேர் உயிரிழந்தனர்.


எட்டா,

எட்டா மாவட்டம் சராய் நீம் கிராமத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த டெம்போ ஒன்று தடுப்பில் மோதி கால்வாய்க்குள் விழுந்து விபத்துக்குள் சிக்கியது. விபத்து அதிகாலை 4 மணியளவில் நடந்து உள்ளது. விபத்தில் 14 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 24 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். 
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த போலீஸார் மீட்பு பணியில் ஈடுபட்டனர். 

விபத்தில் டெம்போவை ஓட்டியவரும் பலியாகிவிட்டார், அதிகாலை வேலையில் அவர் தூங்கியதே விபத்திற்கு காரணம் என முதல்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக அம்மாநில போலீஸ் விசாரித்து வருகிறது.


Next Story