தெற்கு ஆசியா செயற்கைகோள் வெற்றிகர பயணம் விஞ்ஞானிகளுக்கு பிரதமர் பாராட்டு


தெற்கு ஆசியா செயற்கைகோள் வெற்றிகர பயணம் விஞ்ஞானிகளுக்கு பிரதமர் பாராட்டு
x
தினத்தந்தி 5 May 2017 11:30 PM GMT (Updated: 2017-05-06T01:46:36+05:30)

ஜி.எஸ்.எல்.வி.–எப்09 ராக்கெட் மூலம் தெற்கு ஆசியா செயற்கைகோள் நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

புதுடெல்லி,

ஜி.எஸ்.எல்.வி.–எப்09 ராக்கெட் மூலம் தெற்கு ஆசியா செயற்கைகோள் நேற்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதற்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் எழுதி இருப்பதாவது:–

இது ஒரு சரித்திர தருணம். இதற்கு கடுமையாக பாடுபட்ட ‘இஸ்ரோ’ விஞ்ஞானிகள் குழுவை பாராட்டுகிறேன். அவர்களால் நாம் பெருமைப்படுகிறோம்.

இந்த சம்பவம், தெற்கு ஆசிய நாடுகளிடையே புதிய ஒத்துழைப்புக்கு பாதை வகுக்கும். தெற்கு ஆசிய நாடுகளுக்கும், இந்த பிராந்தியத்தின் முன்னேற்றத்துக்கும் பெரிதும் பலன் அளிக்கும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story