தெற்கு டெல்லியில் உள்ள பள்ளி அருகே வாயுக்கசிவு: 110 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி


தெற்கு டெல்லியில் உள்ள பள்ளி அருகே வாயுக்கசிவு: 110 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி
x
தினத்தந்தி 6 May 2017 5:02 AM GMT (Updated: 2017-05-06T10:31:59+05:30)

தெற்கு டெல்லியில் உள்ள பள்ளி அருகே வாயுக்கசிவு ஏற்பட்டதில் 110 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

புதுடெல்லி,

தெற்கு டெல்லியின் துக்ளகாபாத்  பகுதியில்  உள்ள அரசுப்பள்ளி அருகே நின்று கொண்டிருந்த ஒரு கண்டெய்னர் லாரியில் இருந்து வாயுக்கசிவு ஏற்பட்டது. லாரியில் இருந்த எரிவாயுக்கசிந்தததில் ரான்  ஜான்சி சர்வோதயா கன்யா பள்ளி மாணவர்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

லாரியில் இருந்த எரிவாயு கசிந்த தகவல் கிடைத்ததையடுத்து விரைந்து வந்த தீ அணைப்பு படையினர் வாயுக்கசிவை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் மாணவர்களிடம் தொலைபேசியில் பேசியதாக டெல்லி துணை முதல் மந்திரி மனிஷ் சிசோசாடியா தெரிவித்துள்ளார். சம்பவம் பற்றி மாஜிஸ்திரேட்டு விசாரணை நடத்த கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Next Story