விப்ரோ நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் ஊழியர்கள் பீதி


விப்ரோ நிறுவனத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் ஊழியர்கள் பீதி
x
தினத்தந்தி 6 May 2017 1:45 PM GMT (Updated: 2017-05-06T19:15:24+05:30)

பிரபல ஐ.டி.நிறுவனமான விப்ரோவிற்கு இமெயில் மூலம் வந்த வெடிகுண்டு மிரட்டலால் ஊழியர்கள் பீதி அடைந்தனர்.

பெங்களூர்,

பெங்களூரில் உள்ள பிரபல ஐ.டி.நிறுவனமான விப்ரோ அலுவலகத்தை தாக்க போவதாக இமெயில் மூலம் மிரட்டல் வந்தது. அந்த இமெயிலில் ரூ.500 கோடி கொடுக்க வேண்டும் என்றும், கொடுக்க தவறினால் நிறுவனம் வெடிகுண்டு வைத்து தகர்க்கப்படும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த இமெயில் மூலம் வந்த தகவலால் விப்ரோ நிறுவன ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக விப்ரோ நிறுவனம் போலீசாரிடம் புகார் அளித்தது. புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் இமெயில் மூலம் மிரட்டல் விடுத்த மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர். இமெயில் மூலம் வந்த மிரட்டல் கடிதத்தால் அங்கு பரபரப்பு நிலவியது.

Next Story