பாரதீய ஜனதாவின் பிரதிநிதிபோல் செயல்படுகிறார் கிரண்பேடி: நக்மா குற்றச்சாட்டு


பாரதீய ஜனதாவின் பிரதிநிதிபோல் செயல்படுகிறார் கிரண்பேடி:  நக்மா குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 6 May 2017 2:41 PM GMT (Updated: 6 May 2017 2:40 PM GMT)

புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடி பாரதீய ஜனதாவின் பிரதிநிதிபோல் செயல்படுகிறார் என அகில இந்திய மகளிர் காங்கிரஸ் பொது செயலாளர் நக்மா இன்று குற்றம் சாட்டியுள்ளார்.

புதுச்சேரி,

ஆளுநர் என்ற பதவி கிரண் பேடிக்கு வழங்கப்பட்டு உள்ளது.  அவர் அரசியல் பக்கம் வராமல் தனது பணியை மேற்கொள்ள வேண்டும் என அவர் கூறியுள்ளார்.  மீனவர்களுக்கான நிவாரணம் மற்றும் சுற்றுலா வளர்ச்சி போன்ற விவகாரங்களில் பேடி எடுத்துள்ள நிலைப்பாட்டிற்கு கடும் கண்டனமும் தெரிவித்துள்ளார்.

ஏழை மாணவர்கள் படிப்பை தொடர உதவி தொகை வழங்க அனுமதிப்பது, குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி வழங்குவது மற்றும் பிற பல்வேறு நலத்திட்டங்களை காங்கிரஸ் அரசு அமல்படுத்துவதற்கான கோப்புகளுக்கு ஏன் பேடி அனுமதி வழங்கவில்லை என எனக்கு புரியவில்லை என்றும் கூறியுள்ளார்.

புதுச்சேரியின் வளர்ச்சிக்காக மற்றும் புதுச்சேரி அரசால் கொண்டு வரப்படும் நலத்திட்டங்களை அமல்படுத்தும் வகையில் பேடி செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அவர், மத்தியில் உள்ள அரசானது பாரதீய ஜனதா அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

Next Story