ஒடிசா மாநிலத்தில் புதிதாக 12 மந்திரிகள் பதவி ஏற்பு


ஒடிசா மாநிலத்தில் புதிதாக 12 மந்திரிகள் பதவி ஏற்பு
x
தினத்தந்தி 7 May 2017 11:33 PM GMT (Updated: 2017-05-08T05:03:10+05:30)

ஒடிசாவில் பிஜூ ஜனதாதளம் கட்சியின் ஆட்சி நடக்கிறது. நவீன் பட்நாயக் முதல்–மந்திரியாக உள்ளார். அண்மையில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் ஆளும் கட்சி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை.

புவனேசுவரம்,

இதனால் மூத்த மந்திரிகளை கட்சிப் பணிக்கு அனுப்ப முதல்–மந்திரி நவீன் பட்நாயக் முடிவு செய்தார். அவர் கொண்டதற்கு இணங்க அவரது மந்திரி சபையில் இருந்த 10 மந்திரிகள் நேற்று முன்தினம் தங்களுடைய பதவியை ராஜினாமா செய்தனர்.

இதனையடுத்து நேற்று நவீன் பட்நாயக் தனது மந்திரி சபையை மாற்றி அமைத்தார். புதிதாக 10 பேர் மந்திரிகளாக சேர்க்கப்பட்டனர். மேலும் ஏற்கனவே இணை மந்திரிகளாக இருந்து வந்த 2 பேருக்கு கேபினட் அந்தஸ்து வழங்கப்பட்டது.

இவர்கள் 12 பேரும் நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர். கவர்னர் மாளிகையில் நடந்த விழாவில் கவர்னர் எஸ்.சி. ஜமீர் அவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதில் முதல்–மந்திரி நவீன் பட்நாயக் மற்றும் பிற மந்திரிகள் கலந்து கொண்டனர்.


Next Story