பிரான்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் வாழ்த்து


பிரான்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு பிரதமர் மோடி  உள்ளிட்ட உலக தலைவர்கள் வாழ்த்து
x
தினத்தந்தி 8 May 2017 4:13 AM GMT (Updated: 2017-05-08T09:43:22+05:30)

பிரான்சு அதிபர் இம்மானுவேல் மேக்ரானுக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பாரீஸ்,

பிரான்ஸ் அதிபர் பிரான்காயிஸ் ஹோலந்த் பதவிக் காலம் முடிவடைந்த நிலையில் அடுத்த அதிபரை தேர்ந்தெடுக்கும் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு மே 7-ல் நடந்து முடிந்தது. வாக்குப்பதிவில் என் மார்சே என்ற அணியின் சார்பில் போட்டியிட்ட மக்ரோனுக்கு 65.5% சதவித ஓட்டுகள் இவருக்கு அடுத்தபடியாக மெரைன் லி பென்னுக்கு 34.5% வாக்குகள் கிடைத்தன.

மேக்ரானுக்கு கடும் போட்டியாக இருந்த மெரீன் தனது தோல்வியை ஏற்று கொண்டார்.  அவர், மேக்ரானை தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு பேசினார்.  அதன்பின்னர், வலிமையான எதிர்க்கட்சியாக செயல்படுவோம் என செய்தியாளர்களிடம் கூறினார்.

பிரான்ஸ் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற மேக்ரானுக்கு இந்திய பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் டிரம்ப், இங்கிலாந்து பிரதமர் தெரசா மே உள்ளிட்ட உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், ஸ்திரமான வெற்றியை பெற்றிருக்கும் எம்மானுவேல் மக்ரோனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். பிரான்சு அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள மெக்ரானுடன் இணைந்து பணியாற்றி இருநாட்டு உறவுகளை மேலும் வலுப்படுத்த ஆர்வமாக உள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.


Next Story