சென்னை–டெல்லி இடையே கூடுதல் இருக்கைகள் கொண்ட விமானம்


சென்னை–டெல்லி இடையே கூடுதல் இருக்கைகள் கொண்ட விமானம்
x
தினத்தந்தி 8 May 2017 9:45 PM GMT (Updated: 2017-05-09T02:58:13+05:30)

வழக்கத்தை விட அதிக அகலமும், கூடுதல் இருக்கைகளும் கொண்ட பி.777 நவீன ரக விமானத்தை சென்னை–டெல்லி இடையே ஏர் இந்தியா அறிமுகம் செய்து உள்ளது.

புதுடெல்லி,

சென்னை–டெல்லி இடையே விமானத்தில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இதையடுத்து அதிக பயணிகளை சுமந்து செல்வதற்கு வசதியாக வழக்கத்தை விட அதிக அகலமும், கூடுதல் இருக்கைகளும் கொண்ட பி.777 நவீன ரக விமானத்தை சென்னை–டெல்லி இடையே ஏர் இந்தியா அறிமுகம் செய்து உள்ளது. இந்த விமான சேவை நேற்று தொடங்கிவைக்கப்பட்டது.

பி.777 ரக விமானம் நேற்று காலை 6.05 மணி அளவில் டெல்லியில் இருந்து புறப்பட்டு 8.45 மணிக்கு சென்னை வந்து சேர்ந்தது. பின்னர் காலை 9.55 மணிக்கு சென்னையில் இருந்து கிளம்பி, மதியம் 12.55 மணி அளவில் டெல்லியை சென்றடைந்தது. இதேபோல் மாலை 5.20 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு இரவு 8.05 மணிக்கு வந்து சேர்ந்தது. இந்த விமானம் இரவு 9.10 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு நள்ளிரவு 11.55 மணிக்கு டெல்லியை அடைந்தது. ஏர் இந்தியாவின், இந்த புதிய ரக விமானத்தில் ஒரே நேரத்தில் 342 பேர் பயணம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story