பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் மற்றொரு சர்ஜிக்கல் ஆப்ரேஷன்' நடத்த வேண்டி வரும் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை


பாகிஸ்தான் தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் மற்றொரு சர்ஜிக்கல் ஆப்ரேஷன் நடத்த வேண்டி வரும் ராஜ்நாத் சிங் எச்சரிக்கை
x
தினத்தந்தி 9 May 2017 12:28 PM GMT (Updated: 2017-05-09T17:58:23+05:30)

இந்திய எல்லைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தினால் மற்றொரு சர்ஜிக்கல் ஆப்ரேஷன்' நடத்த வேண்டியது வரும் என்று மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதுடெல்லி,

ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராஜ்நாத் சிங் பேசியதாவது:
 
பாகிஸ்தான் இந்திய எல்லைகள் மீது ஆக்கிரமப்பு செய்தால் தக்க பதிலடி கொடுக்கும் படி பாதுகாப்பு படை வீரர்களை கேட்டுக்கொள்கிறேன். பாகிஸ்தான் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தினால் நம் பக்கத்தில் இருந்து குண்டுகளை எண்ணக்கூடாது. இந்திய எல்லைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தினால் இந்திய ராணுவம் மற்றொரு சர்ஜிக்கல் ஆப்ரேஷன் நடத்த வேண்டி வரும். பிரதமர் மோடி தலைமையில் மூன்று ஆண்டுகால ஆட்சியில் உலகின் முன்னனி தலைவர்களாக நாங்கள் இருந்து வருகிறோம். ஒரு முறை பலவீனமாக கருதினால் பிரதமர் மோடி தலைமையில் இந்தியா தற்போது பலவீனமாக இல்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story