தேசிய செய்திகள்

ரஜினி காந்த் அரசியல் பேச்சு தொடர்பாக முன்னாள் முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் கூறியது என்ன? + "||" + O Panneerselvam opinion about Superstar Rajinikanth Politics speech

ரஜினி காந்த் அரசியல் பேச்சு தொடர்பாக முன்னாள் முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் கூறியது என்ன?

ரஜினி காந்த் அரசியல் பேச்சு தொடர்பாக முன்னாள் முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் கூறியது என்ன?
நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தாலும் அதிமுக எனும் ஆலமரத்திற்கு எந்தஒரு பாதிப்பும் கிடையாது என ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,


சென்னையில் ரசிகர்கள் மத்தியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் தமிழகத்தில் அரசியல் நிலவரம் நன்றாக இல்லை என குறிப்பிட்டு இருந்தார். டெல்லியில் இன்று செய்தியாளரிடம் பேசிய முன்னாள் முதல்-அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திடம் தமிழக அரசியலில் வழுவான தலைமை இல்லை என ரஜினி கூறிஉள்ளாரே என கேள்வி எழுப்பட்டது. அதற்கு பன்னீர்செல்வம் பதில் அளிக்கையில், ரஜினிகாந்த் மிகவும் நல்ல மனிதர், சிறந்த ஆன்மீகவாதி. நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரலாம், ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம்.  
யார் அரசியலுக்கு வந்தாலும் ஏற்றுக்கொள்ளக் கூடியவர்கள் மக்கள் தான்.

நடிகர் ரஜினிகாந்தின் வருகை, அதிமுகவை எந்த விதத்திலும் பாதிக்காது என்றார். கேபி முனுசாமி பேசுகையில், தமிழக அரசியல் தலைமையில் ஒரு வெற்றிடம் உருவாகி உள்ளது என்பது உண்மைதான், அதனை நிரப்பும் தலைவராக ஓ.பன்னீர்செல்வம் உள்ளார். ரஜினி அரசியலுக்கு வந்தால் அதிமுக எனும் ஆலமரத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை. அரசியலுக்கு வந்தால்தான் களத்தில் இருக்கும் பிரச்னை தெரியும் என்றார்.